திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டம்
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஆட்சியர் சிவராசு தலைமையில் நடந்தது.;
திருச்சி மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று ஓய்வூதிய தாரர்களின் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் எஸ். சிவராசு தலைமை தாங்கினார்.
இதில் ஓய்வூதிய இயக்ககத்தின் இணை இயக்குனர் கமலநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) சாந்தி, மாவட்ட கருவூல அலுவலர் ரமேஷ்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் அரசு பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் குறைகள் தொடர்பாக அளித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் நடவடிக்கைக்காக உத்தரவிடப்பட்டது.