திருச்சியில் மது போதையில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டவர் சாவு

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்டவர் சாவு.;

Update: 2021-12-07 10:16 GMT

திருச்சி தென்னூர் இதாயத்நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (வயது 51)குடிப்பழக்கம் உடைய இவருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இருந்துள்ளது.

இந்நிலையில் போதையில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உட்கொண்டுள்ளார். இதனால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனடியாகஅவரை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சையது முஸ்தபா பரிதாபமாக இறந்தார். இது குறித்து அவரது மகன் அசாருதீன் கொடுத்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News