சிறப்பான பணி: போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு மத்திய அரசு விருது

சிறப்பாக பணிபுரிந்தமைக்காக திருச்சியை சேர்ந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்பட 7 பேருக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.;

Update: 2021-12-19 03:34 GMT

மத்திய படையான எல்லை பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்புபடை உள்ளிட்ட பல்வேறு படை பிரிவினருக்கு மட்டுமே சிறந்த பணிக்கான மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் உத்கிருஷ்ட் சேவாபடக் மற்றும் அதி உத்கிருஷ்ட்படக் ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதினை தமிழக காவல்துறையிலும் சிறந்த பணிக்காக வழங்க வேண்டும் என பிரதமரின் பரிந்துரையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் எவ்வித குற்றச்சாட்டுக்கும் உட்படாமல் 18 மற்றும் 25 ஆண்டுகள் சிறந்த புலனாய்வு, பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப்போடு பணியாற்றிய 129 பேருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் 3 பேரும், திருச்சி மாநகர எஸ்.பி.சி.ஐ.டி. பிரிவில் ஏற்கனவே பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் ராமானுஜம், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், நுண்ணறிவு பிரிவு ஏட்டு பொன்னுசாமி உள்பட 4 பேரும் என மொத்தம் 7 பேர் இந்த விருது பெறுகிறார்கள். இவர்களில் ஒருசிலர் ஏற்கனவே தாங்கள் பணிபுரிந்த இடங்களில் இருந்து வேறு மாவட்டத்துக்கு பணி மாறுதலாகி சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News