திருச்சி மாநகராட்சி 5-வது மண்டல குழு தலைவர் அலுவலகம் திறப்பு
திருச்சி மாநகராட்சி 5-வது மண்டல குழு தலைவர் அலுவலகம் திறக்கப்பட்டது.;
திருச்சி மாநகராட்சியின் 5-வது மண்டல குழு (கோ அபிஷேகபுரம்) தலைவராக இருப்பவர் விஜயலட்சுமி கண்ணன்.இவரது அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தினை மாநகராட்சி மேயர் அன்பழகன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆணையர் முஜிபுர் ரகுமான், துணை மேயர் திவ்யா, மத்திய மாவட்ட தி.மு.க.பொறுப்பாளர் வைரமணி, கவுன்சிலர்கள் ராமதாஸ், பைஸ் அகமது, கமால் முஸ்தபா மற்றும் தி.மு.க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.