திருச்சியில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருச்சியில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர்மோர் பந்தலை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.;

Update: 2022-04-21 10:23 GMT

திருச்சி உறையூரில் மனிதம் டிரஸ்ட் சார்பில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்.

திருச்சி உறையூர் அருணா தியேட்டர் அருகில் மனிதம் டிரஸ்ட் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு 23வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ் தலைமை தாங்கினார். மனிதம் டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.தினேஷ் குமார் வரவேற்றுப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் நீர்மோர் வழங்கினார். மற்றும் பல்வேறு விதமான பழங்களையும் விநியோகம் செய்தார். மேலும் மனிதம் டிரஸ்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் சமூக தொண்டுகளை பாராட்டி பேசினார். விழாவில் மாநகராட்சி ஐந்தாவது மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .முடிவில் மனிதம் டிரஸ்ட் மேலாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News