திருச்சி அருகே ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

திருச்சி அருகே ஜீயபுரத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.;

Update: 2023-04-19 11:35 GMT

திருச்சி அருகே ஜீயபுரத்தில் இன்று வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஜீயபுரத்தில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. அக்னி நட்சத்திரத்திற்கு முன்பாகவே தமிழகத்தின் திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் வெயில் அளவு தினமும் 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. உச்ச பச்சமாக கரூர் மாவட்டத்தில் நேற்று 106 டிகிரி வெயில் அளவு பதிவாகி உள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க எல்லா இடங்களிலும் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறந்து நீர்மோர், இளநீர், மற்றும் குளிர்பானங்கள் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள்,தமிழக முதல்வரும், தற்போதை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

இந்த வேண்டுகோளின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் நீர்மோர் பந்தல்களை திறந்து வருகிறார்கள். அந்த வகையில்  திருச்சி ஶ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில், அந்தநல்லூர் வடக்கு மற்றும் அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழகம் சார்பில் ஜீயபுரம் கடைவீதியில் கோடைக்கால நீர், மோர் பந்தலை திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான  மு.பரஞ்ஜோதி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் நடராஜன், அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய கழக பொருளாளர் கடிகை ராஜகோபால் ஆகியோர் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் பேரூர் கண்ணதாசன், பாஸ்கரன், புல்லட் ஜான், அன்னை கோபால், விவேக், ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துக்கருப்பன், ஜெயக்குமார், செல்வராஜ், ஆமூர் ஜெயராமன், பேரூர் கழக செயலாளர் செந்தில்குமார் மற்றும் பகுதி கழக செயலாளர்கள் , தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News