திருச்சியில் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணம் மீட்கப்பட்டு ஒப்படைப்பு

திருச்சியில் ஆன்லைன் மூலம் ஏமாற்றப்பட்ட பணத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

Update: 2021-11-17 13:30 GMT

திருச்சியில் ஆன்லைன் மூலம்  நடந்த மோசடியில் மீட்கப்பட்ட பணத்தை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உரியவரிடம் ஒப்படைத்தார்.

திருச்சி மாநகரம் வயலூர் ரோடு வாசன் வேலியை சேர்ந்த தமிழ்மணி என்பவருக்கு எல்.ஐ.சி. போனஸ் தொகை வந்துள்ளது என்ற செல்போன் அழைப்பை நம்பி வங்கி கணக்கு விவரங்களை கூறியதை தொடர்ந்து ரூ. 47 ஆயிரம் அவரது வங்கி கணக்கில்இருந்து அபேஸ் செய்யப்பட்டிருந்தது.

இதே போல டி.வி.எஸ். டோல்கேட் இக்பால் காலனியில் வசிக்கும் கோமதி என்பவர் பிளிப்கார்டில் டி.வி. ஆர்டர் செய்துள்ளார். அது failed என்று காட்டவே இது குறித்து பிளிப்கார்டு கஸ்டமர் கேரில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். எதிர் முனையில் பேசியவர் any desk app-1 என்ற செயலியை இன்ஸ்டால்செய்ய சொல்லி உள்ளார். இதனை நம்பி இன்ஸ்டால் செய்யவே அவரது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.1 லட்சம் மாயமானது.

இது குறித்து இருவரும் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி மாநகர சைபர் கிரைம் பிராஞ்ச் போலீசார் விசாரணை நடத்தி இருவரின் பணத்தை மீட்டுக்கொடுத்துள்ளனர். இழந்த பணத்தை திரும்ப பெற்ற மகிழ்ச்சியில் அவர்கள் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயனை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Tags:    

Similar News