ஒமிக்ரான்: திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு ஒமிக்ரான் பரிசோதனை பற்றி அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு நடத்தினார்.

Update: 2021-12-02 14:06 GMT

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நடத்த வேண்டிய ஒமிக்ரான் பரிசோதனை தொடர்பாக தமிழக சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டு பிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற பெயரில் தற்போது உலகையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. நமது இந்திய நாட்டில் இரண்டு  பேருக்கு ஒமிக்ரான்  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார துறை அமைச்சர் அறிவித்து உள்ளார்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயனாளிகளுக்கு நடத்த வேண்டிய பரிசோதனைகள் பற்றி மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக அமைச்சர் சுப்பிரமணியன் இன்று மாலை திருச்சி சர்வவதேச விமான நிலையத்திற்கு வந்தார். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நடத்த வேண்டிய பரிசோதனைகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில்  தமிழக சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பொதுசுகாதார துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், இணை இயக்குனர் சம்பத்குமார், திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, திருச்சி விமான நிலைய இயக்குனர் தர்மராஜ் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News