திருச்சியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பு
திருச்சியில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு. போலீசார் விசாரணை.;
திருச்சி பாலக்கரை துரைசாமிபுரம் தனமணி காலனியை சேர்ந்தவர் சிங்கராயர் மனைவி தெரஸ் (வயது 76). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள கறிக்கடைக்கு சென்று கறி வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து வந்தார். அப்போது அப்பகுதியில் உள்ள ரேசன் கடை அருகே பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தெரசை வழி மறித்து செயின் திருட்டு சம்பவங்கள் அதிகளவில் நடப்பதால் செயினை கழற்றி பத்திரமாக வையுங்கள் என கூறி 5 பவுன் செயினை கழற்றி கொடுக்க கூறியுள்ளனர்.
தெரசும் செயினை கழற்றி கொடுத்துள்ளார். அவரது கண் முன்னே பேப்பரில் வைத்து மடித்து அவர் வைத்திருந்த பர்சில் வைத்து அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு வந்த தெரஸ் பேப்பரை திறந்து பார்த்த போது அதில் சிறிய அளவிலான கற்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குபதிந்து பட்டப்பகலில் மூதாட்டியிடம் கைவரிசை காட்டிய. 2 மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.