திருச்சி மாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் போராட்ட அறிவிப்பு
திருச்சி மாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் ஜனவரி 5 போராட்ட அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
திருச்சி மாநகராட்சியை கண்டித்து தரைக்கடை வியாபாரிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
திருச்சி தில்லை நகர், உறையூர் பகுதிகளில் தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்க கூடாது, சாலை ஓர வியாபாரிகள் வாழ்வுரிமைச் சட்டம் 2014 அமல்படுத்த வேண்டும், உறையூர் பகுதிகளில் தரைக்கடை வியாபாரிகளை மிரட்டி பணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், பெரிய கடை முதலாளிகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் துணை போகக்கூடாது, பணக்காரர்கள் கார் நிறுத்தும் காரணத்திற்காக தரைக்கடை தள்ளு வண்டிகளை அப்புறப்படுத்த கூடாது, தரைக்கடை வியாபாரிகளுக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கி வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தரைக்கடை வியாபாரிகள் திருச்சி மாநகராட்சி மண்டலம் 5 கோபிஷேகபுரம் கோட்ட அலுவலகம் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்த போராட்டமானது ஜனவரி 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி நடைமுறை இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கம் மேற்கு பகுதி குழு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.