திருச்சியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம்

திருச்சியில் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம் துவக்கி வைக்கப்பட்டது.

Update: 2023-11-26 12:42 GMT

திருச்சி ஹைவேஸ் காலனியில் செய்தி தாள் வாசிப்பு இயக்கம் இன்று தொடங்கப்பட்டது.

திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவிரி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக "செய்தித்தாள் வாசிப்பு இயக்கம்" இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தொடக்க விழாவிற்கு நகர் நல சங்கத்தின் தலைவர் கி. ஜெயபாலன் தலைமை தாங்கினார். மாணவர்கள் வாழ்வில் உயர் பதவிகளை அடைய வேண்டுமெனில் தினந்தோறும் நாளிதழ்களை தவறாமல் வாசிக்க வேண்டும். நாட்டு நடப்பை மக்களுக்கு எடுத்து சொல்வதில் செய்தித்தாள்கள் முக்கிய பங்காற்றுகின்றன என்று தெரிவித்தார்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெற்றோர்களும் வாசிப்பு பழக்கத்தின் முக்கியத்துவத்தை இளைய சமுதாயத்தினரிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று ஜெயபாலன் கூறினார்.


பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்திற்கு தினசரி செய்தித்தாள்களை படித்தனர்.

முன்னாள் துணை ஆட்சியர்கள் மாரியப்பன் மற்றும் எஸ்.ஆர். சத்தியவாகீஸ்வரன், வேலைவாய்ப்பு துறை முன்னாள் இயக்குனர் பி. ஹரன், முன்னாள் சுகாதாரத் துறை அதிகாரி உத்தமன், விக்டர் பொன்னுதுரை, சலாஹியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் பாரூக் பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நகர் நல சங்கத்தின் செயலாளர் செந்தில்குமார் "செய்தித்தாள் வாசிப்பு இயக்கம்" கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறும் என்று தெரிவித்தார்.

இறுதியில் இன்றைய தினசரிகளில் பிரசுரம் ஆகியிருந்த செய்திகளின் அடிப்படையில் வினாடி வினா போட்டியின் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News