திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடம்: அமைச்சர் திறந்தார்

திருச்சி ராமகிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்தார்.

Update: 2022-06-29 11:33 GMT

இராம கிருஷ்ணா குடிலில் புதிய பள்ளி கட்டிடத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்தார்.

திருச்சி அருகே  திருப்பராய்துறையில் இராமகிருஷ்ணா குடில் உள்ளது. இங்கு இன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  ராக்சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டிடத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.

அமைச்சர் பேசுகையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பாராட்டை பெற்ற இராமகிருஷ்ண குடிலில் பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்துவைத்து. 70 ஆண்டுகளுக்கு மேலாகஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு, இருப்பிடம், கல்வி வழங்கி வருகிற இப்பள்ளி தன்னிறைவுபெற்ற பள்ளியாக இருப்பது சிறப்பு என்றார்.

இந்நிகழ்வில் ராமகிருஷ்ணா குடிலை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News