நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாணவர் சங்கத்தினர் சத்யாகிரக போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் சத்யாகிரக போராட்டம் நடத்தினர்.;

Update: 2021-11-11 17:56 GMT

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருச்சியில் இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.

நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்ட மசோதாவில் ஆளுநர் கையெழுத்திட வேண்டும். நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின், திருச்சி மாநகர் மாவட்டக்குழு சார்பில் திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலை முன் அமர்ந்து இன்று சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் துளசிதாஸ், மாவட்ட நிர்வாகிகள் சூர்யா, அழகுராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News