திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஏற்றப்பட்டது தேசிய கொடி

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேசிய கொடியை மாநகர போலீஸ் கமிஷனர் ஏற்றினார்.

Update: 2022-08-14 06:53 GMT

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக மொட்டை மாடியில் கமிஷனர் கார்த்திகேயன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

75வது சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவாக கொண்டாடப்படவேண்டும் என பிரதமர் மோடி அறிவித்தார். இந்த அறிவிப்பின்படி நாடு முழுவதும் அனைத்து வீடுகள் மற்றும் அரசு  தனியார் அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களில் 3 நாட்கள் அதாவது ஆகஸ்டு 13ந்தேதி முதல் 15ந்தேதி இரவு வரை தொடர்ந்து தேசிய கொடி பறக்கவேண்டும் எனவும் மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருந்தது. இந்த உத்தரவின் படி பெரும்பாலான வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களில் நேற்று காலையில் ஏற்றப்பட்ட தேசிய கொடி இன்னும் பட்டொளி வீசி பறந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மொட்டை மாடியில் நேற்று காலை தேசிய கொடி ஏற்றி  கொடிவணக்கம்  செய்து மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News