ரயிலில் இருந்து தவறி விழுந்த நாதஸ்வர கலைஞர் பலி

கழிவறைக்கு பதிலாக பெட்டியின் கதவை திறந்ததால் ரயிலில் இருந்து தவறி விழுந்த நாதஸ்வர கலைஞர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.;

Update: 2021-12-18 05:30 GMT

பைல் படம்.

செங்கல்பட்டு அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 50). நாதஸ்வர கலைஞரான இவர் நேற்று முன்தினம் நெல்லையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் சென்று கொண்டிருந்தார். மணப்பாறை அய்யலூர் இடையே ரயில் சென்றபோது முத்துகிருஷ்ணன் ரயிலில் உள்ள கழிவறைக்கு செல்ல முயன்றார். அப்போது அவர் கழிவறையின் கதவை திறப்பதற்கு பதிலாக ரயில் பெட்டி கதவை திறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் நிலைதடுமாறி ரயிலில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் திருச்சி ரயில்வே போலீசார் முத்துகிருஷ்ணன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News