திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்ட நிரல் திருவிழா
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நான் முதல்வன் திட்ட நிரல் திருவிழா நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா ஒருநாள் பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தொடங்கி வைத்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நிரல் திருவிழா ஒருநாள் பயிற்சி பட்டறையை மாவட்ட ஆட்சி;த்தலைவர் பிரதீப்குமார் இன்று (08.11.2023) தொடங்கி வைத்து உரையாற்றினார்.
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்புத்திட்டங்களில் ஒன்றான நான் முதல்வன் திட்டத்தின் நிரல் திருவிழா ஒரு நாள் பயிற்சி பட்டறையில் பேசிய ஆட்சியர் தெரிவித்ததாவது:-
நான் முதல்வன் -நிரல் திருவிழாவின் நோக்கமான மாணவ சமூகத்தினரிடையே புதுமையான எண்ணங்கள் மற்றும் ஆர்வத்தைஏற்படுத்தி மாணவ சமூகத்தின் தரத்தை மேம்படுத்துவதுடன் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் பல துறைகள் தங்களின் தொழிற்நுட்ப ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இன்று (08.11.2023) இந்தஒரு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் நோக்கம் முழுவதுமாக செம்மையாக நிறைவேறும் பொருட்டு அரசின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 தொழிற்நுட்ப தலைப்புகளில் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசின் பல்துறைகள் தங்களின் தொழிற்நுட்ப ரீதியான பிரச்சனைகளுக்குதீர்வு காணும் வகையில்இந்த https://niralthiruvizha.naanmudhalvan.in/வலைத்தளம்உருவாக்கப்பட்டுள்ளது.இந்த வலைத்தளத்தில் பிரச்சனைகளை தெளிவாக பதிவேற்றம் செய்யப்படுவதன் மூலம்; தொழிற்நுட்ப ரீதியான பிரச்சனைகள் ஒருங்கிணைக்கப்படும்.
ஒரு நாள் பயிற்சிப்பட்டறையின் நோக்கம் தொழில்நிறுவனங்கள் மற்றும் அரசின் பல்துறைகள் மேற்கண்ட வலைத்தளத்தில் தங்களின் பிரச்சனைகளை பதிவேற்றம் செய்வது தொடர்பாக நேரடி பயிற்சி அளிப்பதற்கும்,நிரல் திருவிழாவில்வலைத்தளத்தை கையாள்வது குறித்தும,; இந்நாள் வரை சந்தித்த இடையூறுகளுக்கு தீர்வு காண்பதாக இப்பயிற்சிப்பட்டறை அமைய உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் உதவி இயக்குனர் இஸ்மத்பானு,மாவட்டதொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்கள், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.