திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி ஹோமம்
திருச்சி நாகநாதசுவாமி கோயிலில் குருபெயர்ச்சி விழாவையொட்டி ஹோமத்தில் பக்தர்கள் பங்கேற்றனர்.;
இந்து சமய அறநிலைத்துறைகட்டுப்பாட்டில் திருச்சி நந்தி கோயில் தெருவில் உள்ள நாகநாத சுவாமி கோயிலில் குருபெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது.ஐப்பசி மாதம் 27-ம் தேதியான சனிக்கிழமை மாலை 6.21 மணிக்கு குருபகவான்மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசித்தார். இதனை முன்னிட்டு நாகநாத சுவாமி கோயிலில் குருபகவானுக்கு பரிகார ஹோம பூஜைகள் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு உத்திரவின்படி குருபெயர்ச்சி பரிகார ஹோமத்தில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதிஇல்லை என்று கூறப்பட்டிருந்தது.ஆனாலும் இதில் பக்தர்கள் குறைவான அளவில் கலந்து கொண்டனர்.
பரிகார ஹோமத்தில் கலந்து கொள்ள விரும்பியவர்கள் தங்களின் பெயர் நட்சத்திரம், ராசி ஆகிய முழு விபரங்களுடன் கோயில் அலுவலகத்தில் அதற்கான பதிவுபரிகாரம் செய்து கொண்டனர். இதில் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசியினர் அதிக அளவிலும் மற்ற ராசியினர் குருபகவானை தரிசித்தும் சென்றனர்.மாலை 5 மணிக்கு மேல் அனுக்ஞை, விநாயகர் பூஜை, புண்யாகவாசனம் வேதிகார்ச்சனைசங்கல்ப்பம், ஹோமங்கள் நடைபெற்றது.
பின்னர் 6 மணிக்கு மேல் பூர்ணாஹுதி,மஹா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 6.30 மணிக்கு மேல் மஹா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் த.விஜயராணி,செயல் அலுவலர்பா.கீதா மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.