திருச்சியில் நபார்டு கிராம சாலை பணியை தலைமை பொறியாளர் ஆர். கீதா ஆய்வு

திருச்சியில் நபார்டு கிராம சாலை பணியை தலைமை பொறியாளர் ஆர். கீதா ஆய்வு செய்தார்.

Update: 2022-05-28 11:13 GMT
திருச்சி மாவட்டத்தில் நபார்டு கிராம சாலைகள் பணியை நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ஆர். கீதா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்சி நபார்டு மற்றும் கிராம சாலைகள் கோட்டத்தின் மூலம் செயலாக்கப்படும் தேசிய நெடுஞ்சாலை 45 ல் இருந்து பிரியும் 2 கி.மீ. நீளமுள்ள கீழ வங்காரம் சாலையை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்துவது பற்றிய ஆய்வு பணி நடைபெற்றது. நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் தமிழக தலைமை பொறியாளர் ஆர். கீதா இந்த பணிகளை ஆய்வு செய்தார். அப்போது கண்காணிப்பு பொறியாளர் விஜயலட்சுமி, திருச்சி கோட்ட பொறியாளர் வடிவேல், உதவி கோட்ட பொறியாளர்கள் பிரபாகர், சந்திரசேகர் (தரக்கட்டுப்பாடு) ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News