திருச்சியில் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியீடு
திருச்சியில் நபார்டு வங்கியின் வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் சிவராசு வெளியிட்டார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நபார்டு வங்கியின் சார்பில் 2022 - 2023 ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் சிவராசு வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் மோகன் கார்த்திக்,இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதுநிலை மண்டல மேலாளர் வேலாயுதம் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.