தரம் உயர்த்தப்பட்ட முசிறி, லால்குடி நகராட்சிக்கு புதிய கமிஷனர்கள் நியமனம்

திருச்சி மாவட்டத்தில் தரம் உயர்த்தப்பட்ட முசிறி, லால்குடி நகராட்சிகளுக்கு புதிய கமிஷனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2021-12-16 05:36 GMT

திருச்சி மாவட்டத்தில் முசிறி, லால்குடி ஆகிய பேரூராட்சிகள், கரூர் மாவட்டம் புகளூர் ஆகிய பேரூராட்சிகள் அதன் அருகே வளர்ச்சி அடைந்துள்ள ஊராட்சிகளை ஒன்றிணைத்து நகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. இதையடுத்த இவற்றுக்கு முதல் முறையாக கமிஷனர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.

அதன்படி, திருச்சி மாவட்டத்தில் லால்குடி நகராட்சிக்கு பல்லவபுரம் நகராட்சி மேலாளர் வி.குமார், முசிறி நகராட்சிக்கு தஞ்சாவூர் மண்டல நகராட்சி இயக்குனர் அலுவலக கண்காணிப்பாளர் சி.மனோகரன் ஆகியோர் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல் கரூர் மாவட்டம் புகளூர் நகராட்சிக்கு தலைமை செயலக உதவி பிரிவு அலுவலர் ஜி.கனிராஜ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Tags:    

Similar News