கொலை வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் அடைக்க கமிஷனர் உத்தரவு
திருச்சியில் கொலை வழக்கில் கைதானவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார்.
திருச்சி மேலபுலிவார்டு ரோடு, மரக்கடை சந்திப்பில் உள்ள பொது கழிப்பிடம் அருகில் கடந்த 13.09.21-ந்தேதி ரிசாந்த் என்பவரை மர்ம நபர்கள் கொலை செய்து விட்டதாக அவரது தாய்பாப்பாத்தி என்பவர் கொடுத்தபுகாரின் பேரில் காந்திமார்க்கெட்காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கினை காந்திமார்க்கெட் சட்டம், ஒழுங்குகாவல் ஆய்வாளர் புலன் விசாரணைசெய்து, முன்பகை காரணமாக ரிசாந்த் கொலைசெய்யப்பட்டதாக தெரிய வந்தநிலையில் எதிரிகளை பிடிக்க திருச்சிமாநகர போலீஸ் கமிஷனர்கார்த்திகேயன் உத்தரவுப்படிதனிப்படை அமைக்கப்பட்டு, மேற்படிவழக்கில் 1.சூர்யா 2.ஸ்டீபன், 3.வேலு(என்கிற) ராஜதுரை, 4.கருப்பு (என்கிற)ஹமீது, 5.வெங்கடேஷ் (என்கிற)வெட்டு வெங்கடேஸ், 6.குருமூர்த்தி(என்கிற) காட்டு ராஜா, 8. அரவிந்த்,9. மணிகண்டன் (என்கிற) டிராகன்மணிகண்டன் 10.விக்னேஷ் எனமொத்தம் 10 பேரை கைது செய்துநீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இவ்வழக்கின் குற்றவாளியான அரவிந்த் என்பவர் மீது பல்வேறுகாவல் நிலையங்களில் ஆறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. எனவே, மேற்படிஅரவிந்த் என்பவர் தொடர்ந்து குற்றம்செய்யும் எண்ணம் உள்ளவர் எனவிசாரணையில் தெரிய வருவதாலும்,அவரது தொடர் குற்ற நடவடிக்கையைதடுக்கும் பொருட்டும்காந்திமார்க்கெட் சட்டம், ஒழுங்குகாவல் ஆய்வாளர் கொடுத்தஅறிக்கையின் பேரில் திருச்சி மாநகரகாவல் ஆணையர் கார்த்திகேயன் குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில்இருந்து வரும் அரவிந்திடம் வழங்கப்பட்டது.
மேலும்,திருச்சி மாநகரில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீதுசட்டரீதியான நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என திருச்சிமாநகர காவல் போலீஸ் கமிஷனர் கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார்.