இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூப்பனார் நகர்நல சங்கம் கலெக்டரிடம் மனு
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மூப்பனார் நகர்நல சங்கம் கலெக்டரிடம் மனு
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அப்போது திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த மூப்பனார் நகர் நல சங்க தலைவரும் சமூக ஆர்வலருமான தொப்பி செல்லத்துரை ஒரு மனு கொடுத்தார்.
அந்த மனுவில் திருவெறும்பூர் பகுதியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த சுமார் 600 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு கொடுத்தோம். இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி பட்டா கொடுக்க ஆவண செய்வதாக உறுதி அளித்தனர். ஆனால் இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
வருகிற 15ம் தேதி வரை பட்டா வழங்கப்படவில்லை என்றால் சுதந்திர தினத்தன்று வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதற்கு பதிலாக கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்துவோம் என கூறப்பட்டு உள்ளது.