தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திர கூட்டம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) மாதாந்திர கூட்டம் திருச்சியில் நடந்தது.

Update: 2022-08-09 10:59 GMT
திருச்சியில் நடந்த தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) கூட்டத்தில்  மாவட்ட தலைவர் ப. அருள்ஜோஸ் பேசினார்.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் (நடவடிக்கை குழு) மாதாந்திர கூட்ட திருச்சி புத்தூர் மதுரம் ஹாலில் நடந்தது. மாவட்ட தலைவர் ப. அருள்ஜோஸ் தலைமை தாங்கினார்.  மாவட்ட துணை தலைவர் ஆர்தர் காட்வின் வரவேற்றார்.

தலைவர் அருள்ஜோஸ் பேசுகையில் மாநில சங்க நடவடிக்கை குழுவின் செயல்பாடுகள் குறித்தும், கடந்த 23-7-2022 ந்தேதி சிவகங்கை மாவட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க நடவடிக்கை குழு அமைக்கப்பட்டது பற்றியும், விலைவாசி உயர்வு மற்றும் அதற்கேற்ப அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படாதது பற்றியும்விரிவாக எடுத்துரைத்து 2022 புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்வர்களுக்கு  முழு செலவுத்தொகை கிடைக்காதது பற்றி பேசினார்.

மாவட்ட செயலாளர் மாரிமுத்து கடந்த ஜூலை மாதம் சங்கம் சார்பாக வயதான மற்றும் உடல்நலமில்லாத ஓய்வூதியர்களின் இல்லங்களுக்கு சென்று நேர் காணல் நடத்தியது பற்றி குறிப்பிட்டார். கூட்டத்தில் வட்ட தலைவர்கள் முசிறி முத்துகிருஷ்ணன், தொட்டியம் சுதந்திரநாதன், துறையூர் வரதராஜன், திருச்சி மேற்கு விக்டர் ஜோசப் ராஜ், திருச்சி கிழக்கு வட்ட செயலாளர் ஸ்டீபன் அல்போன்ஸ்ராஜ், மாவட்ட துணை தலைவர் ஜெகநாதன் ஆகியோர் பேசினார்கள்.

மாவட்ட பொருளாளர் சந்திரசேகரன் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தார். முடிவில் மாவட்ட இணை செயலாளர் ஆஜிரா பீவி நன்றி கூறினார்.


Tags:    

Similar News