'மோடி சிறந்த நடிகர்'- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன்
பிரதமர் மோடி சிறந்த நடிகர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் அளித்த பேட்டியில் கூறினார்.;
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் திருச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தஞ்சாவூர் மாணவி தற்கொலை விவகாரத்தில் உறுதிப்படுத்தப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வாறெல்லாம் அவர்களால் வளர முடியாது.
தஞ்சை மாணவி தற்கொலைக்கு போராடும் அண்ணாமலை நீட் தேர்வினால் உயிரிழந்த 25 மாணவிகளின் உயிருக்கு என்ன நிலைப்பாடு வைத்துள்ளார். உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.கவுடன் சுமூகமாக பேசி முடிவெடுப்போம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உயிரோடு இருந்திருந்தால் அவர் தான் வாங்கிய செவாலியர் விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி இருப்பார். அந்த அளவிற்கு மோடி நடித்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது நிர்வாகிகள் இந்திரஜித், சுரேஷ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.