திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை

அண்ணா நினைவு தினத்தையொட்டி திருச்சியில் அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்;

Update: 2022-02-03 05:15 GMT

அண்ணா நினைவு தினத்தையொட்டி திருச்சியில் அவரது சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சர்கள் 

திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் பேரறிஞர் அண்ணாவின் 53-வது நினைவு நாளை முன்னிட்டு  அமைச்சர் கே.என்.நேரு,  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் அண்ணாவின் உருவ சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், சௌந்தரபாண்டியன், ஸ்டாலின் குமார், பழனியாண்டி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி,  மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News