ஜல்ஜீவன் திட்டத்தை நகரங்களுக்கும் விரிவு படுத்த அமைச்சர் நேரு கோரிக்கை

ஜல் ஜீவன் திட்டத்தை நகர்புறங்களுக்கும் விரிவுப்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.;

Update: 2022-03-08 09:00 GMT

திருச்சியில் நகர்ப்புற  வளர்ச்சி திட்டத்தை அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட நியூ பாத்திமா நகர் பகுதியில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று மரம் நட்டுவைத்து தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் பணியாற்ற உள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மூலம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தான் பயன் பெற்று வருகின்றனர்.இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் 36 சதவீதம் தான் நகர்ப்புறத்தில் மக்கள் வசிக்கிறார்கள், பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பதால் பல திட்டங்களை மத்திய அரசு கிராமப்புறத்தை மையமாக வைத்தே செயல்படுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் 63 சதவீதம் மக்கள் நகர்ப்புறங்களில் வசிக்கிறார்கள். ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தால் நகர்புறங்களில் இருப்பவர்கள் பயன்பெற முடியவில்லை. எனவே தான் தமிழ்நாடு அரசு சார்பில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியில் உள்ள ஒரு மண்டலம், 27 பேரூராட்சிகள், 5 நகராட்சிகளில் மட்டும் முதற்கட்டமாக இது செயல்படுத்தப்பட உள்ளது என்றார்.

Tags:    

Similar News