திருச்சியில் பறவைகள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் நேரு
திருச்சி அய்யாளம்மன் படித்துறை அருகே பறவைகள் பூங்காவிற்கு அமைச்சர் நேரு அடிக்கல் நாட்டினார்.
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திருச்சிராப்பள்ளி சாலைரோடு மற்றும் கோட்டை ஸ்டேசன் சாலையினை இணைக்கும் ரயில்வே மேம்பாலத்தை திரும்ப கட்டுதல் மற்றும் சாலையினை விரிவாக்கம் செய்யும் வகையில் ரூ.34.10 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தும் மற்றும் ஸ்ரீரங்கம் வட்டம், அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை இன்று (20.11.2023) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசியதாவது:-
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சாலை ரோடு மற்றும் கோட்டை ஸ்டேஷன் சாலையினை இணைக்கும்இரயில்வே மேம்பாலம் (மாரீஸ் தியேட்டர் பாலம்)ஆனது 1866 ஆம் ஆண்டு சுண்ணாம்பு மற்றும் செங்கல் கட்டிடத்திலான வளைவு வடிவ இருபக்க நடைபாதையுடன் 9 மீ அகலமுடைய ஒரு வழி பாதையாகும். இரயில்வே துறையில், இப்பாலம் கட்டப்பட்டு 157 வருடம் காலம் ஆகிறதாலும், கனரக வாகனத்திற்கு ஏற்ற வகையில் இல்லாததாலும், இப்பாலம் பழுதடைந்துள்ள காரணத்தினாலும், இரயில்வே மேம்பாலத்தினை உயரப்படுத்தியும் மற்றும் அகலப்படுத்தியும் கட்ட வேண்டியுள்ளது எனக் குறிப்பிட்டு 50:50 செலவு பங்கீட்டுதொகையில் கட்டுவதற்கு ஒப்புதல் கோரி கடிதம் பெறப்பட்டது.
இதனைத் தொடர;ந்து, எதிர்கால போக்குவரத்தினை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி இரு வழிபாதையாக இப்பாலத்தினை புதிதாக கட்டுவதற்கு ரூ. 34.10 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டு உள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள இருவழிப்பாதை இரயில்வே மேம்பாலத்தின் நீளம் 31.39 மீ, அகலம் 20.70 மீட்டர் ஆக இருக்கும். இரயில்வே பாலத்தின் கிழக்கு பகுதியில் 223.75 மீ நீளமும், 15.61 மீட்டர் அகலம் உடையதாகவும், மேற்கு பகுதியில் 225 மீ நீளமும், 15.61மீ அகலமுடையதாக சாலையினை தடுப்பு சுவர்களுடன் விரிவாக்கம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பாலத்தினை இருவழிப்பாதையாக கட்டப்படுவதினால் மெயின்கார்டு கேட் பகுதியிலிருந்து தில்லை நகர் தென்னூர், புத்தூர் மற்றும் உறையூர் பகுதிகளுக்கு போக்குவரத்து இடையூறின்றி சுலபமாக செல்ல இயலும்.இத்திட்ட பணியானது ஒரு வருட காலத்திற்குள் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதேபோல் திருச்சிராப்பள்ளியில் பெரிய அளவில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள் இல்லாத நிலையில்தான், கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, முக்கொம்பில் ஒரு பெரிய பூங்கா அமைக்கப்பட்டது. அதனை சிறப்பானமுறையில் பராமரித்திட இந்தாண்டு அதற்கான நிதி பெறப்படும். அதேபோல் இந்த பறவைகள் பூங்கா காவிரி கரையில் அமைக்க வேண்டும் என்பதுமாவட்ட ஆட்சியரின் விருப்பமாகஇருந்தது. அதனை தற்போது செயல்படுத்தி உள்ளோம். இத்திட்டம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.70கோடி மதிப்பீட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கம்பரசம்பேட்டை ஊராட்சியில் 1.63 ஹெக்டேர் பரப்பளவில் பறவைகள் பூங்கா அமைத்திட திட்டமிடப்பட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு இசைவும் பெறப்பட்டது. இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அhpய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள், வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது.
இவ்வாறு அமைச்சர் நேரு பேசினார்.