திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் நேரு வழங்கினார்
திருச்சியில் 200 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களை அமைச்சர் நேரு வழங்கினார்;
- திருச்சி மாநகராட்சி பகுதி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உய்யக்கொண்டான் வாய்க்கால் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு 200 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, தியாகராஜன், ஸ்டாலின் குமார், சௌந்தர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.