மின்விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ஆறுதல்
திருச்சியில் மின்விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல் கூறினார்.
திருச்சி தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் தேவதர்ஷினி, முகிலன். மின்சார விபத்தினால் பாதிக்கப்பட்டு இவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமொழி இன்று அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டு அறிந்து மருத்துவமனையின் முதல்வர் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோர்களுடன் கலந்து ஆலோசித்து அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவ முறைகள் குறித்து ஆலோசனை செய்தார்.
அவர்களுக்கு ஆறுதல் கூறி தைரியமாக இருக்கும்படியும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மருத்துவமனையின் முதல்வர் நேரு, திருச்சி மாநகராட்சி மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்