அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி கிராப் பட்டியில் வாக்குப்பதிவு செய்தார்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி கிராப் பட்டியில் தனது வாக்கை பதிவு செய்தார்.;
திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட கிராப்பட்டி 58-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லிட்டில் ஃப்ளவர் மேல்நிலைப்பள்ளியில், தனது வாக்கினை பதிவு செய்தார்.
அமைச்சருடன் அன்பில் பெரியசாமி, அமைச்சரின் தாயார் மாலதி பொய்யாமொழி உள்ளிட்ட குடுப்பத்தினர் வாக்களித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைவரும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.