திருச்சி மாவட்டத்தில் இன்று 515 இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்

திருச்சி மாவட்டத்தில் இன்று கொரோனா மெகா தடுப்பூசி முகாம் 515 இடங்களில் நடக்கிறது.;

Update: 2021-11-28 07:26 GMT

திருச்சி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 12-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் இரவு 7 மணிவரை இந்த முகாம் நடக்கிறது. திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளுக்குட்பட்ட 200 இடங்களி லும், புறநகர் பகுதியில் 315 இடங்களிலும் என மொத்தம் 515 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முதல் தவணை செலுத்தாதவர்கள், 2-வது தவணை செலுத்த தவறியவர்கள் அனைவரும் தங்களது ஆதார் கார்டு, செல்போன் எண்ணுடன் அருகில் உள்ள மெகா தடுப்பூசி முகாம்களுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள கலெக்டர் எஸ்.சிவராசு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்ட 76.3 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News