திருச்சி கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு

திருச்சி கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு செய்தார்.;

Update: 2022-03-24 13:31 GMT

திருச்சி கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று ஆய்வு பணி மேற்கொண்டார்.

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று 55 ஆவது வார்டு பகுதியில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். இந்த வார்டில் உள்ள கருமண்டபம் ,ஜெயநகர், வசந்த் நகர் மற்றும் பிராட்டியூர் பகுதிகளில் அவர் ஆய்வு பணிகளை மேற்கொண்ட போது அங்குள்ள மக்கள் தங்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி எடுத்துக் கூறினார்கள்.

குறிப்பாக மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டும், குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் ,மழைநீர் வடிகால் முறையாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். பிராட்டியூர் மாநகராட்சி பள்ளியையும் மேயர் அன்பழகன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 55 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிவா ஆப்டிகல்ஸ் ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News