திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மே தின விழா கொண்டாட்டம்
திருச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.
திருச்சி மேற்கு பகுதி குழுவின் சார்பில் மே தினத்தை முன்னிட்டு தில்லை நகர் 22வது வார்டில் பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் வெங்கடேசன் கொடியை ஏற்றி வைத்தார். 11வது வார்டில் கிளைச் செயலாளர் லட்சுமணன் தலைமையில் ஏஐடியுசி பொதுச்செயலாளர் சுரேஷ் கொடி ஏற்றி வைத்தார். 10-ஆவது வார்டு வார்டு கிளை செயலாளர் ரவீந்திரன் தலைமை வகித்தார்.
இதில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் ஆயிஷா கமால் கொடியேற்றி வைத்தார். 9வது வார்டில் கிளைச் செயலாளர் ஆனந்தன் தலைமை வகித்தார், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சிவா கொடி ஏற்றி வைத்தார். 8வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் சரண் சிங் தலைமை வகித்தார், கொடியினை மாவட்ட குழு உறுப்பினர் வை. புஷ்பம் ஏற்றி வைத்தார். 24வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார், கொடியினை பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி ஏற்றிவைத்தார். 23வது வார்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் முருகன் தலைமை வகித்தார். கொடியினை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.செல்வராஜ் ஏற்றிவைத்தார். குறத்தெரு ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சிக்கு ஆட்டோ ஓட்டுனர் சங்க நகர செயலாளர் துரைராஜ் தலைமை வகித்தார், கொடியினை வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராம்ராஜ் ஏற்றி வைத்தார்.
நிகழ்வுகளை அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் க.இப்ராகிம் ஒருங்கிணைத்தார். மற்றும் நிகழ்ச்சியில் பகுதி குழு உறுப்பினர்கள் வேங்கையன், ராஜ்குமார், நாகராஜ் ஆகியோர் பங்கேற்றனர். இறுதியாக உறையூர் குறத்தெரு பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கூட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் சத்யா தலைமை வகித்தார், நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் ஏ.கே. திராவிட மணி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் சுரேஷ், மற்றும் ராமராஜ், சிவா, ஆகியோர் மே தின உரை நிகழ்த்தினர். கூட்டத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாநிலத் தலைவர் வெங்கடேஷ் வேம்புலி சிறப்புரையாற்றினார்.