மருங்காபுரி பகுதி வளர்ச்சி திட்ட பணிகள்: திருச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மருங்காபுரி பகுதி வளர்ச்சி திட்ட பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-13 18:10 GMT

மருங்காபுரி பகுதியில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இன்று (13.06.2024) நேரில் பாh;வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பளுவஞ்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபாய் 8.80 இலட்சம் மதிப்பீட்டில்; கதிர் அடிக்கும் களம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், ரூபாய் 4.36 இலட்சம் மதிப்பீட்டில்; கல்லாமேடு கோட்டைப்பளுவஞ்சி இணைப்பு சாலை முதல் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வரும் பணி நடைபெற்று வருவதையும், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 3.79 இலட்சம் மதிப்பீட்டில்; புதிய குளம் அமைக்கப்பட்டு வரும் பணி நடைபெற்று வருவதையும், முத்தாழ்வார்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 32.80 இலட்சம் மதிப்பீட்டில்; சேத்துப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு புதிதாக இரண்டு வகுப்பறைகள் கட்டும் கட்டுமானப் பணி நடைபெற்று வருவதையும், செவல்பட்டி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 12.30 இலட்சம் மதிப்பீட்டில்; புதிதாக கட்டப்பட்டு வரும் நியாயவிலைக் கடையின் கட்டிடப் பணி நடைபெற்று வருவதையும், இக்கரைகோசுக்குறிச்சி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 5.07 கோடி மதிப்பீட்டில்; மங்கலப்பட்டி சாலையில் பெரிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், செவல்பட்டி ஊராட்சியில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூபாய் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் செவல்பட்டி ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ள பணியினையும், இக்கரைகோசுக்குறிச்சி ஊராட்சியில் நபார்டு திட்டத்தின் கீழ்; ரூபாய் 5.93 கோடி மதிப்பீட்டில்; சீகம்பட்டி முதல் வலசுபட்டி சாலையில் பெரிய பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமானதாகவும்; முடித்திட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், கல்லாமேடு ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பாh;வையிட்டு ஆய்வு செய்தார்

மேலும், மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், செவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் மருத்துவமனை வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டு, நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்து, மருந்துகள் இருப்பு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, நோயாளிகளுடன் கலந்துரையாடினார்.

பின்னர் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், பளுவஞ்சி ஊராட்சியில் உள்ள கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளுக்கு வழங்கப்படும்; மருந்துகள் இருப்பு மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நோpல் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மருங்காபுரி ஊராட்சி ஒன்றியம், முத்தாழ்வார்பட்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் சென்று குழந்தைகளின் வளர்ச்சி, எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன்பருவ கல்வி முறைகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.

இந்நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாட்சியர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News