திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் கணவன் கண் முன் தூக்கிட்டு தற்கொலை
திருச்சி கோட்டை பகுதியில் காதல் திருமணம் செய்த பெண் கணவன் கண் முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள தேவதானம், மூவேந்தர் விஸ்தரிப்பு அசோக் நகரை சேர்ந்தவர் தர்மராஜ சோழன். தனியார் வாட்டர் கேன் நிறுவனத்தில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயசித்ரா (வயது 24). கடந்த 4 ஆண்டுக்கு முன் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது தனியாக வசித்து வரும் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் கணவன், மனைவி இருவரும் சாப்பிட்ட நிலையில் தர்மராஜசோழன் சற்றே தூங்கியுள்ளார். தொடர்ந்து மாலை கண் விழித்து பார்த்த போது காதல் மனைவி ஜெயசித்ரா, தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து திடுக்கிட்டு கதறினார். இது குறித்த தகவலின் பேரில் கோட்டை போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜெயசித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.