மணப்பாறை வீரமலை பாளையம் துப்பாக்கி சுடும் இடத்தில் பொதுமக்கள் நடமாட தடை
மணப்பாறை வீரமலை பாளையம் துப்பாக்கி சுடும் இடத்தில் பொதுமக்கள் நடமாட தடை விதித்து திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப் பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வருகின்ற 11.07.2022 முதல் 12.07.2022 வரை உள்ள தினங்களில், காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 22 ஆர்ஏஜே ஆர்ஐஎப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற இருப்பதால், அச்சமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும், தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.