அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் மலேசிய தமிழ் மன்றத்தினர் சந்திப்பு

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் மலேசிய தமிழ் மன்றத்தினர் சந்தித்து பேசினார்கள்.;

Update: 2023-04-09 13:22 GMT

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மலேசிய தமிழ் மன்றத்தினர் சந்தித்து பேசினார்கள்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை மலேசியத் தமிழ்மணி மன்றத்தினர் ஞாயிற்றுக்கிழமை அவரது அலுவலகத்தில் சந்தித்து கல்வித் துறையில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.

மலேசியத் தமிழ்மணி மன்றத்தினர் கல்விச் சுற்றுலாவாக மலேசியத் தமிழ் மணிமன்றத்தின் தேசியத் தலைவர் டாக்டர் சு.வைத்திலிங்கம் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவினர் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 12 தேதி வரை தமிழகத்தில் தங்கி இருந்து தமிழக கல்வி நிறுவனங்களான பல்கலைக்கழகங்கள்,பள்ளி,கல்லூரிகளை பார்வையிட வந்துள்ளனர்.

அவர்கள் திருச்சியில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள்,தமிழக அரசின் முன்னெடுப்புகள்,மாணவர்களுக்கான செயல் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.


அமைச்சரும் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் புதுமைப்பெண் திட்டம்,நான் முதல்வன் திட்டம்,இல்லம் தேடி கல்வித் திட்டம்,எண்ணும் எழுத்தும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறினார்.

பின்னர் தமிழர்களின் அடையாளமாகத் திகழும் கீழடி அருங்காட்சியகத்தை அவசியம் பார்வையிடுங்கள் என மலேசியத் தமிழ்மணி மன்றத்தினரிடம் அமைச்சர்  கூறினார்.அதே போல் மலேசியத் தமிழ்மன்றத்தினரும் மலேசியாவில் நடைபெற உள்ள தமிழ் சார்ந்த கல்வி சார்ந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகிய தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என நேரில் அழைப்பு விடுத்தனர்.

இந்நி்கழ்வில் தமிழக அரசின் ஆசிரிய மனசுத் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சிகரம் சி.சதீஷ்குமார் , மலேசியத் தமிழ்மணி மன்றத்தை சேர்ந்த தேசியத் துணைத்தலைவர் மா.ஆறுமுகம்,தேசியச் செயலாளர் இரா. கோகிலவாணி,தேசிய மகளிர் தலைவர் வ.ஜீவரேகா,தேசிய மகளிர் பொருளாளர் மு.மணிமேகலை,தேசிய நிர்வாக செயலாளர் கா.காவேரி,பேராக் மாநில மகளிர் பகுதி தலைவர் டாக்டர் தே.ராமநாயகம்,தேசிய மகளிர் பகுதி செயலாளர் மு.சதாலெட்சுமி,ஜொகூர் தாமான் சுத்ரா பாரு கிளைத் தலைவர் வே.கலைவாணி,தாமான் ரிஷா கிளை உறுப்பினர் சு.இளங்கோ,தொழில் அதிபர் சாமிக்கண்ணு என்ற சமசூல் கைருள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News