'ராமதாசை வெற்றி பெறச்செய்யுங்கள்' -வாய்ஸ் கொடுத்தார் அமைச்சர் நேரு

‘ராமதாசை வெற்றி பெறச்செய்யுங்கள்’ -என அமைச்சர் நேரு அலுவலக திறப்பின்போது வேண்டுகோள் விடுத்தார்.;

Update: 2022-02-11 08:16 GMT

வேட்பாளர் ராமதாசை ஆதரித்து அமைச்சர் நேரு பேசினார்.

திருச்சி மாநகராட்சி 55வது வார்டு  தி.மு.க.வேட்பாளராக போட்டியிடும்  வெ. ராமதாஸ் தனது வார்டு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார்.


55வது வார்டு தி.மு.க. தேர்தல் அலுவலகத்தை தி.மு.க .முதன்மை செயலாளரும் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு திறந்து வைத்தார்.

அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் நேரு பேசுகையில் இந்த வார்டு தி.மு.க. வேட்பாளர் ராமதாஸ் கடுமையான உழைப்பாளி. அவர் ஏற்கனவே இரண்டு முறை தனியாக நின்று கணிசமான வாக்கு பெற்றிருக்கிறார்.இப்போது அவர் தி.மு.க. சார்பில் போட்டியிடுவதால் அவரை ஆயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் பெற்றி பெறச்செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த வார்டில் வசிக்கும் எனது உறவுக்காரர்கூட சொன்னார் ராமதாஸ் தவிர வேறு யாருக்கும் சீட் கொடுக்காதீர்கள் என்றார். அந்த அளவிற்கு ராமதாஸ் நல்ல உழைப்பாளியாக கருதப்படுகிறார். உங்களை நம்பி தான் அவரை இங்கே நிறுத்தி இருக்கிறேன் என்றார்.

இந்த விழாவில் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News