மக்கள் கலை இலக்கிய கழக பொதுச்செயலாளராக திருச்சி கோவன் தேர்வு
மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பொதுச்செயலாளராக திருச்சி கோவன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.;
மக்கள் கலை இலக்கிய கழகம் என்பது சமுதாயத்தில் அடித்தட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினை, விவசாய தொழிலாளர்களின் பிரச்சினை, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை கலை நிகழ்ச்சிகள் மூலம் தெருக்களில் இசையுடன் கூடிய பாடல் பாடி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தேர்தல் பாதைக்கு அப்பாற்பட்ட ஒரு கொள்கை சார்ந்த அமைப்பாகும்.
இந்த அமைப்பின் பொதுச்செயலாளராக திருச்சியை சேர்ந்த பாடகர் கோவன் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக இவர் எழுதி பாடிய பாடல் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி கைது படலம் வரை சென்றது. பின்னர் அவர் விடுதலையானார் என்பது குறிப்பிடத்தக்கது.