திருச்சியில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு சேலை வினியோகம்

தீபாவளியையொட்டி திருச்சியில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு சேலை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது.;

Update: 2021-11-02 17:47 GMT

திருச்சியில் மகிளா காங்கிரஸ் சார்பில் ஏழைகளுக்கு சேலை மற்றும் பொருட்கள் வழங்கப்பட்டது.

திருச்சி மகிளா காங்கிரஸ் சார்பில், தீபாவளியை முன்னிட்டு 50 ஏழை மக்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் புடவைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.இதில்  தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். ரெக்ஸ்  சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வழங்கினார்,

நிகழ்வில் மகிளா மாவட்ட தலைவி ஷீலா செலஸ், பொது செயலாளர் அஞ்சு, கோட்ட தலைவி விஜயலட்சுமி, செயலாளர் ராதா, அம்பிகா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News