திருச்சியில் உதயநிதி பிறந்த நாள் விழாவையொட்டி முதியோர்களுக்கு மதிய உணவு
திருச்சியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி முதியோர்களுக்கு தி.மு.க.வினர் மதிய உணவு வழங்கினர்.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 46வது பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின்னர் தனது தந்தையும், தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் ஆசீர்வாதம் பெற்றார்.
தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடினார்கள். அந்த வகையில் உதயநிதி பிறந்த நாளையொட்டி திருச்சி பிராட்டியூர் சரணாலயம் முதியோர் இல்லத்தில் பொன்னகர் பகுதி தி.மு.க. சார்பில் பகுதி செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் வட்டச் செயலாளர்கள் மூவேந்திரன், தனசேகர்,பி.ஆர்.பால சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் வெ.ராமதாஸ்,மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, அந்தோணிசாமி, வட்ட பொருளாளர் பந்தல் ராமு, பகுதி நிர்வாகிகள் கவிதா, பவுன்ராஜ், மோகன், முரளிதரன், சுகுமார், பீமநகர் சதீஷ்குமார், திருப்பதி, கருத்து கதிரேசன், குமுளித்தோப்பு மனோகரன், சிவா, மணிவேல், இளங்கோவன், முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.