திருச்சி நகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவலம்
திருச்சி மாநகரில் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகும் அவல நிலை உள்ளது.
திருச்சி முதலியார் சத்திரம் குட்ஷெட் ரோடு ஆசாத் தெரு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் குடிசைப்பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளது. சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது.
மேலும் மழைநீருடன் கழிவுநீரும் கலந்துள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. இரவு நேரத்தில் தண்ணீரில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் இருப்பதால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி கண்டுகொள்ளவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல் திருச்சி அம்பிகாபுரம், பாலாஜி நகர் பகுதியில் உள்ள வீடுகளை சுற்றி மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. மேலும் சாலைகள் சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.