திருச்சியில் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சியில் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2022-02-13 11:22 GMT

திருச்சி 20வது வார்டு லோக்தந்திக் ஜனதாதளம் கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.

திருச்சி மாநகராட்சி 20 வது வார்டில் லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் கே.சி. ஆறுமுகம் போட்டியிடுகிறார். வேட்பாளர் ஆறுமுகம் இன்று காலை பெரிய சௌராஷ்ட்ரா தெரு, ராணித் தெரு, கீழ ராணித் தெரு,மேல ராணித் தெரு, உடையவர் கோவில் தெரு பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.


ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் தனது சின்னமான முகம் பார்க்கும் கண்ணாடியை காட்டி தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார், ஆறுமுகம். அவருடன் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஏராளமானவர்கள் சென்றிருந்தனர்.

Tags:    

Similar News