திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.;
திருச்சி யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழி வழங்கினார்.
நாணயங்கள் சேகரிப்பு மூலம் வரலாற்றை எடுத்துரைக்கும் சமூக ஆர்வலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக முப்பதாம் ஆண்டு நிறைவு விழா திருச்சி தில்லைநகர் கி ஆ பெ விசுவநாதம் தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார். செயலர் பத்ரி நாராயணன்,பொருளாளர் திலகராஜன் உள்ளிட்டோர் முன்னிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பழங்கால நாணயங்கள் மற்றும் பழங்கால புழங்கு பொருட்களை சேகரித்து பண்டைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றிப் பாதுகாத்து இளைய சமுதாயத்தினரிடம் வரலாற்றை எடுத்துரைத்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கினார்.
யோகா ஆசிரியர் விஜயகுமார் திருச்சியில் அநாதையாக இறந்த கிடப்பவர்களின் உடல்களை சேகரித்து அவற்றை நல்லடக்கம் செய்யும் பணியயையும் பல ஆண்டுகளாக செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.