மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டு
மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி வீரர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் பதக்கம் பெற்றவருக்கு திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் பாராட்டு மற்றும் நினைவு பரிசு வழங்கும் விழா இன்று மாலை 6மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந்தது.
திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜூ தலைமையில் , தடகள சங்க பொருளாளர் சி.ரவிசங்கர், மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், பயிற்சியாளர் பிரான்ஸ் சகாயராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
மாநில அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் 166 புள்ளிகளுடன் 8 தங்கம், 11 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று, திருச்சி மாவட்ட தடகள சங்க சார்பில் ஜுனியர் தடகள வீரர்கள் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டியலில் 5-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பதக்கம் பெற்ற வீரர்களுக்கு ஆப்பிள் மில்லட் வீரசக்தி, நீயூரோ ஒன் மருத்துவமனை இயக்குனர் விஜயகுமார் ,திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் கே. பிரபு , ஆகியோர் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளை பாராட்டி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார்கள் .
இதில் சரவணன் , லாசர், லெட்சுமணன், கணேசன், ஆரிப் மற்றும் பயிற்சியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.