பணி ஓய்வு பெற்ற மின் பொறியாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் வாழ்த்து
திருச்சியில் பணி ஓய்வு பெற்ற மின் பொறியாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.;
ஓய்வு பெற்ற மின் பொறியாளருக்கு சால்வை அணிவித்த சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்.
திருச்சியில் பணி ஓய்வு பெற்ற மின் பொறியாளருக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழகத்தில் உதவி மின் பொறியாளராக பணியாற்றியவர் எம். ஆலயமணி. சுமார் 36 ஆண்டு காலம் மின் வாரியத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய இவர் கடந்த மாதம் 31ந்தேதி பணி ஓய்வு பெற்றார். மேலும் தி.மு.க.வின் பொறியாளர் அணியின் திருச்சி தெற்கு மாவட்ட அமைப்பாளராகவும் இவர் உள்ளார்.
பணி ஓய்வு பெற்ற அவருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாததால் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் இனிகோ இருதயராஜ் இன்று திருச்சி ஜே.கே.நகரில் உள்ள ஆலய மணியின் வீட்டிற்கு நேரடியாக சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் பணிக்காலத்தில் அவர் மின் வாரியத்திற்கும் மின் நுகர்வோருக்கும் செய்த சேவைகள் பற்றியும் எடுத்துக்கூடி பாராட்டு தெரிவித்தார்.
அப்போது அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க. தொண்டர்களும் சென்று இருந்தனர்.