திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர் சரவணன் மாலை அணிவிப்பு
திருச்சியில் அம்பேத்கர் சிலைக்கு வழக்கறிஞர் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.;
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு இன்று காலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம் சரவணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின் போது மாவட்ட துணைத்தலைவர்கள் மலைக்கோட்டை முரளி, வரகனேரி எம். என். பிலால், மகளிர் அணி அஞ்சு, கலைப்பிரிவு ராஜீவ்காந்தி, சண்முகம், சம்சுதீன், சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.