லால்குடி விவசாயிகளுடன் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடல்

லால்குடி விவசாயிகளுடன் மின் இணைப்பு தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துரையாடினார்.;

Update: 2022-04-16 15:28 GMT

லால்குடியில் நடந்த காணொலி காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் 350 விவசாயிகளு இலவச மின்இனைப்பு வழங்கி பயன்பெற்று விவசாயிகளிடம் காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கலந்துரையாடல் நிகழ்ச்சி லால்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தலைமையில் இந்த  நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் லால்குடி தொகுதியில் மட்டும் 350 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் லால்குடி ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், லால்குடி நகர்மன்ற தலைவர் துரைமாணிக்கம். நகர்மன்ற துணைத் தலைவர் சுகுணா ராஜ்மோகன், லால்குடி நகராட்சி ஆணையர் குமார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் லால்குடி செயற்பொறியாளர் அன்புசல்வம் உதவி செயற்பொறியாளர்கள் கணேசன், அமுதா, கோவிந்தன், உதவி பொறியாளர்கள் கண்ணன், கனகராஜ், பிரதீப், இருதயராஜ்,ராணி, ஸ்ரீதர்,முருகேசன், பால்ராஜ், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

லால்குடி தொகுதியில் இலவச மின் இணைப்பு பெற்ற 350 விவசாயிகளும் கலந்து கொண்டு முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்கள்.

Tags:    

Similar News