திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி சிபிஎம் சார்பில் நடந்தது.

Update: 2022-05-16 12:16 GMT

திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் சி.பி.எம். கட்சி சார்பில் கே. வரதராஜன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின், மாவட்ட செயலாளராக ,கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக, கட்சியின்.அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக ,அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளராக ,திருச்சி மாவட்டத்தின், கம்யூனிஸ்ட், ஆளுமைகளில், ஒருவராக திகழ்ந்தவர் கே. வரதராஜன். இவரது இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி திருச்சி மத்திய பஸ் நிலையத்தில்  சி.பி.எ.ம் ஜங்ஷன் பகுதி செயலாளர், ரபிக் தலைமையில். நடைபெற்றது .

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  ரேணுகா மற்றும் பகுதி குழு உறுப்பினர் கணேசன், வள்ளி, வேதநாயகம், ஷேக் மொய்தீன், அப்துல் கையூம். மாதர் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, அரசு போக்குவரத்து தலைவர் சமுகம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்,

Tags:    

Similar News