அன்னையர் தின நாளில் சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களுக்கு பாராட்டு
அன்னையர் தின நாளில் சிறப்பு குழந்தைகளின் அன்னையர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
திருச்சியில் நடந்த அன்னையர் தின நிகழ்வில் சிறப்பு குழந்தைகளின் அன்னையர்கள் பாராட்டப்பட்டனர்.
திருச்சியில் அன்னையர் தினத்தில் சிறப்பு குழந்தைகளின் அன்னையர்கள் கெளரவபடுத்தப்பட்டார்கள்
ஒவ்வொரு ஆண்டும் மே 14ம் தேதி அன்னையர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உலக அளவில் அன்னையர்கள் கவுரவபடுத்தப்பட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ பவுண்டேஷன் சார்பில் நிறுவனர் கிருஷ்ணர் தலைமையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் மாவட்ட செயலாளர் இளங்கோ, எஸ்.சூரியா, சுந்தர்ராஜன், முன்னிலையில் கொண்டாட்டப்பட்டது.
திருச்சி கீழவயலூர் ஸ்ரீ கோசாலாயில் சிறப்பு (மனநல பாதித்த) குழந்தைகளின் அன்னையர்களை கௌரவப்படுத்தினர்கள்.
நிகழ்விற்கு துறையூர் தாய் கோவில் நிறுவனர் சுரேஷ், மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி. நீலமேகம், சிறகுகள் மனநல பேற்றோர்கள் சங்கம் நிறுவனர் சுந்தரம், முதுகு தண்டுவடம் சங்க செயலாளர் ராஜ்சேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டு அன்னையர்கள் உடன் சேர்ந்து விளையாட்டுகளில் கலந்து கொண்டு சிப்பித்தார்கள்.
இந்த நிகழ்வில் அன்னையர்கள் சுமார் 100 பேருக்கு மேல் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அன்னையர் தின நாளில் சிறப்பு குழந்தைகளின் தாய்மார்கள் கவுரவப்படுத்தப்பட்டு இருப்பதை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.